2026 ஜூன் 2 அன்று குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறுகிறார். விருச்சிக ராசி இல் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி தரும் விரிவான பலன்கள் கீழே காணலாம்.
கடக ராசியில் குரு பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பார்.
அக்டோபர் 31, 2026 முதல்:அதிசார கதியில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ஜனவரி 25, 2027:வக்ர நிலையில் மீண்டும் கடக ராசிக்கு திரும்புவார்.
பாக்கிய ஸ்தானத்தில் உச்ச குரு - அதிர்ஷ்டத்தின் உச்சக்கட்டம்!
நவகிரகங்களில் சுப கிரகமாகவும் தனகாரகராகவும் விளங்கக்கூடிய குரு பகவான், விருச்சிக ராசியினருக்கு 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி அன்று எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் (மிதுன ராசி) இருந்து ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு (கடக ராசி) பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சியால் கடக ராசியில் குரு பகவான் "உச்சபலம்" அடைகிறார். விருச்சிக ராசிக்கு அதன் அதிபதியான செவ்வாயை விட குரு பகவான் மிக முக்கியமானவர். ஏனெனில் அவர் தன ஸ்தானாதிபதியாகவும் (இரண்டாம் வீடு), பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் (ஐந்தாம் வீடு) வருவார். 12 ராசிகளிலேயே விருச்சிக ராசிக்கு மட்டும்தான் குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெறும் அமைப்பு அமைகிறது. இந்த உச்ச நிலை 2026 ஜூன் முதல் அக்டோபர் வரை நீடிக்கிறது. இது வெறும் சாதகமான காலம் மட்டும் அல்ல, உங்களின் வாழ்நாளில் வரக்கூடிய மிக மிக அதிர்ஷ்டமான பொன்னான காலகட்டமாகும்.
அதிர்ஷ்டமும் நற்பலங்களும்: ஒன்பதாம் வீட்டில் பாக்கிய குருவாக அமரப்போகும் இந்த உச்ச குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினருக்குக் குறைந்த உழைப்பில் அசாத்தியமான நன்மைகளையும் பெரும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கவுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: 1. தொழில், உத்தியோக வளர்ச்சி அடையும். சொந்த ஊர் அல்லது தாய்நாட்டை விட்டு வெளியூர், வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு பிரமாதமான காலகட்டமாகும். உங்களின் தொழில் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு ( Next Level ) உயரும். சிலர் உத்தியோக உயர்வு அல்லது மேற்படிப்புகளுக்காக வெளிநாடு செல்லும் அரிய வாய்ப்பினைப் பெறுவீர்கள். இதற்கு முன்பு அஷ்டம குருவால் பணியிடங்களில் சந்தித்த அவமானங்கள், மன உளைச்சல்கள் அனைத்தும் மறைந்து, உங்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும் கௌரவமும் கிடைக்கும். மேலதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினர் உங்களைப் பாராட்டும் வண்ணம் உங்களின் செயல்பாடுகள் அமையும். கடமைக்கு வேலை செய்தவர்கள் கூட புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படத்தொடங்குவீர்கள்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வியாபார தந்திரங்கள்: பண வரவுகள் மற்றும் சேமிப்புகள் கணிசமாக உயரும். உங்களின் நீண்ட நாள் கடன்கள் சுலபமாக அடையும். சுயதொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய பிசினஸ் ஐடியாக்கள் தோன்றும். சாதுரியமான வியாபார தந்திரங்களைக் கையாண்டு உங்களின் போட்டியாளர்களை நீங்கள் எளிதில் வெல்வீர்கள். குறிப்பாக ஆன்மீகத்துறை, டிராவல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சித் துறை, மீடியா, பப்ளிஷிங், எழுத்துத்துறை மற்றும் ஹோட்டல் அல்லது உணவு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி அபரிமிதமான லாபத்தையும் அசுர வளர்ச்சியையும் தரும்.
குரு பார்வையின் மகா யோகங்கள்: விருச்சிக ராசிக்கு இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தனது பார்வைகளால் முப்பரிமாண நன்மைகளைத்தருகிறார்.
1. ஐந்தாம் பார்வை (ராசியின் மீது): குருவின் ஐந்தாம் பார்வை நேரடியாக விருச்சிக ராசியின் மீதே விழுவதால் உடல் ஆரோக்கியம் மிகச்சிறப்பாக மேம்படும். கடந்த கால உடல்நலத் தொந்தரவுகள் முழுமையாக குணமாகி, எப்போதும் புத்துணர்ச்சியோடு ( Energetic ) காணப்படுவீர்கள். யோகா, நடைப்பயிற்சி போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
2. ஏழாம் பார்வை (மூன்றாம் வீட்டின் மீது): உங்களின் செயல் திறன் மற்றும் தைரியம் அதிகரிக்கும். இதுவரை 10 அல்லது 20 முறை முயற்சித்தும் தோல்வி அடைந்த காரியங்கள் கூட, தற்போது எடுக்கும் முதல் முயற்சியிலேயே அமோக வெற்றியைத் தரும். உங்களின் இளைய சகோதர, சகோதரிகளுக்கு (தம்பி/தங்கை) சுபகாரியங்கள் கைகூடும். இதுவரை மதிப்பு கிடைக்காத இடங்களில் கூட உங்களின் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.
3. ஒன்பதாம் பார்வை (ஐந்தாம் வீட்டின் மீது): பூர்வ புண்ணிய மற்றும் புத்திஸ்தானமான ஐந்தாம் வீட்டில் தற்போது சனி பகவான் அமர்ந்துள்ளார். அதன் மீது குருவின் ஒன்பதாம் பார்வை விழுவதால், மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கி மனம் தெளிவுபெறும். வாழ்க்கை, வேலை, குழைந்தைகள் மற்றும் குடும்பத்தை நினைத்து உங்களை வாட்டி வதைத்த தேவையற்ற பயங்கள் (மனோபயம்) முற்றிலும் விலகும்.
4. பூர்வீக சொத்துக்கள் மற்றும் குடும்ப மகிழ்ச்சி: தாத்தா அல்லது கொள்ளுத் தாத்தா வழியில் வர வேண்டிய பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த நீண்ட காலத் தடைகள், சிக்கல்கள் முற்றிலும் நீங்கி, இந்த ஐந்து மாதங்களுக்குள் பூர்வீக சொத்துக்கள் உங்களுக்குக் கிடைப்பதற்கு 100% வாய்ப்புகள் உள்ளன. குலதெய்வத்தின் பூரண அருள் கிட்டும்; நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்வில் நீங்கள் இவ்வளவு நாள் எதையெல்லாம் குறை என்று நினைத்தீர்களோ, அவை அனைத்தையும் இந்த பாக்கிய குரு நிவர்த்தி செய்வார்.
சுருக்கமாகக்கூறின், 2026 ஆம் ஆண்டு நிகழவிருக்கும் இந்த உச்ச குரு பெயர்ச்சியானது விருச்சிக ராசியினரின் வாழ்வில் புதிய வசந்தத்தையும், நல்லவிதமான திருப்புமுனைகளையும் ஏற்படுத்தப்போகிறது. அஷ்டம குருவின் இன்னல்களில் இருந்து விடுபட்டு, பாக்கிய குருவின் பேராற்றலால் அனைத்துத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டப்போகும் விருச்சிக ராசியினருக்கு இந்த ஐந்து மாதங்கள் ஒரு வரப்பிரசாதமாகும்!