2026 ஜூன் 2 அன்று குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறுகிறார். மிதுன ராசி இல் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி தரும் விரிவான பலன்கள் கீழே காணலாம்.
கடக ராசியில் குரு பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பார்.
அக்டோபர் 31, 2026 முதல்:அதிசார கதியில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ஜனவரி 25, 2027:வக்ர நிலையில் மீண்டும் கடக ராசிக்கு திரும்புவார்.
இந்தக் குரு பெயர்ச்சியின் உச்ச பலன்கள் அனைத்தும் 2026 ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தடையின்றி நடக்கும். அக்டோபர் 31-க்கு பிறகு குரு பகவான் அதிசார கதியில் சிம்ம ராசிக்கு மாறுவதால், இந்த முதல் ஐந்து மாதங்களை மிதுன ராசியினர் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
மிதுன ராசியினருக்கு கரியர் மற்றும் வேலைவாய்ப்பில் இந்த காலகட்டம் ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு (Promotion) மற்றும் நல்ல சம்பள உயர்வு மிக எளிதாக வந்து சேரும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்களுக்கு, இப்போது தகுந்த மரியாதை மேலதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக சம்பளத்துடன் கூடிய மிகச் சிறந்த ஆஃபர்கள் தேடி வரும்.
சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது மிக உகந்த காலமாகும். உங்களது கூட்டுத்தொழில்கள் அமோக லாபத்தை ஈட்டித்தரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்யக்கூடிய பணியாளர்கள் மிகவும் விசுவாசமாகவும் திறமையாகவும் அமைவார்கள். 7-ஆம் அதிபதி உச்சமடைவதால் புதிய வாடிக்கையாளர்கள் (Customers) மற்றும் கிளையன்ட்டுகள் உங்களைத் தேடி வருவார்கள்.
குரு பகவான் வாக்கு ஸ்தானத்தில் உச்சமடைவதால் உங்களது பேச்சில் ஒரு புதிய தெளிவும், கம்பீரமும் பிறக்கும். நீங்கள் மற்றவர்கள் மத்தியில் குறைவாகப் பேசினாலும், பேசும் வார்த்தைகள் மிக ஆழமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். இதனால் பணியிடங்களிலும் சரி, சமூகத்திலும் சரி உங்களுக்கான மரியாதையும் மதிப்பும் பல்மடங்கு உயரும். "அவர் சொன்னா கரெக்ட்டா இருக்கும்ப்பா" என்று உங்களது மேலாளர்களே உங்களைப் பாராட்டும் நிலை உருவாகும்.
12 ராசிகளிலேயே இந்த 2026 குரு பெயர்ச்சியால் மிகச் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தையும், நிதி ரீதியான நன்மைகளையும் பெறப்போவது மிதுன ராசி மட்டும்தான். உங்களது சேமிப்புகள் மளமளவென உயரும்; புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான சேர்க்கை உண்டாகும். 7-ஆம் அதிபதி தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் உங்களது வாழ்க்கைத்துணையின் (Spouse) குடும்பம் மூலமாக திடீர் பணவரவோ அல்லது சொத்துக்களோ வந்து சேரும்.
குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். இதுவரை நீங்கள் பார்த்திராத அளவிற்கு உங்களது வாழ்க்கைத்துணையிடமிருந்து உணர்வுபூர்வமான மற்றும் நிதி ரீதியான (Emotional & Financial Support) முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மிதுன ராசிக்கு 7-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால், இதற்கு முன்பு ஜென்ம குருவால் குடும்பத்திற்குள் ஏற்பட்டிருந்த கடுமையான சண்டைகள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இந்த ஜூன் முதல் அக்டோபர் வரையிலான 5 மாதங்களுக்குள் முழுமையாகத் தீர்ந்துவிடும்.
முகம் மற்றும் வாக்குக்கான இரண்டாம் வீட்டில் பூரண சுபரான குரு உச்சம் பெறுவதால், உங்களது முகம் மிகவும் பொலிவுற்று பிரகாசமாக மாறும். குறிப்பாகப் பெண்களுக்கு ஒருவித 'லட்சுமி கடாட்சம்' முகத்தில் தெளிவாகத் தெரியும். நீண்ட நாட்களாகப் பல் சம்பந்தமான பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெற நினைத்தவர்களுக்கு இப்போது நல்ல பலன் கிடைக்கும்.