← குரு பெயர்ச்சி 2026 — அனைத்து ராசிகள்

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2026

2026 ஜூன் 2 அன்று குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகி உச்சம் பெறுகிறார். மகர ராசி இல் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சி தரும் விரிவான பலன்கள் கீழே காணலாம்.

முக்கிய காலகட்டங்கள் (2026 - 2027):

ஜூன் 2, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரை:

கடக ராசியில் குரு பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பார்.

அக்டோபர் 31, 2026 முதல்:

அதிசார கதியில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

ஜனவரி 25, 2027:

வக்ர நிலையில் மீண்டும் கடக ராசிக்கு திரும்புவார்.

குருவின் நேரடிப் பார்வை: தொட்டதெல்லாம் துலங்கப்போகும் பொற்காலம்!

அறிமுகம்

2026 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியானது மகர ராசியில் பிறந்தவர்களுக்குப் பொன்னான காலகட்டத்தை உருவாக்கப் போகிறது. இதுவரை மறைவு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான், தற்போது மகர ராசிக்கு ஏழாம் வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகி அங்கு முழு உச்ச பலத்துடன் அமர்கிறார். குறிப்பக, 2026 ஜூன் 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான ஐந்து மாத காலகட்டத்தில் குரு பகவான் கடக ராசியிலேயே உச்ச நிலையில் நீடிப்பார். இந்த ஐந்து மாதங்களும் மகர ராசியினருக்கு மிகவும் அற்புதமான மற்றும் சாதகமான பலன்களை வாரி வழங்கக் கூடிய ஒரு பொற்காலமாக அமையவுள்ளது.

1. தொழில் மற்றும் வியாபாரத்தில் உலகளாவிய வளர்ச்சி

சுயதொழில் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு இக்காலகட்டம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளாகத் தொழிலில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடந்த மகர ராசியினர் கூட, இந்த ஒரு வருடத்திற்குள் வியக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுப் புதிய கிளைகளைத் (Branch) தொடங்கும் யோகத்தைப் பெறுவர். குரு பகவான் 12-ஆம் இடத்து அதிபதியாகி ஏழாம் வீட்டில் உச்சம் பெறுவதால், உங்கள் வணிகத்தை உலகளாவிய சந்தைக்கு (Global Expansion) கொண்டு செல்லும் முயற்சிகள் அமோக வெற்றியடையும். மேலும், கார்ப்பரேட் துறைகளான தகவல் தொழில்நுட்பம் (IT), தொலைத்தொடர்பு, ஊடகம் (Media) மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கரியர் வளர்ச்சி அதன் உச்சதைத் தொடும். புதிய கூட்டு முயற்சிகள் (Joint Ventures) மூலம் தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தி லாபம் ஈட்டுவீர்கள்.

2. 100% கைகூடும் திருமண யோகமும் குடும்ப மகிழ்ச்சியும்

ஜோதிட ரீதியாக ஏழாம் வீடு என்பது திருமணம், கூட்டுத்தொழில் மற்றும் மக்கள் தொடர்பைக் குறிக்கும். இந்த வீட்டில் குரு உச்சம் பெறுவதால் இந்தத் தளங்களில் இருந்த தடைகள் யாவும் முற்றிலும் விலகும்:

  • திருமணத்தடைகள் நீங்குதல்: கடந்த மூன்று முதல் நான்கு வருடங்களாக வரன் தேடிச் சோர்ந்து போயிருந்த மகர ராசியினருக்கு இந்த பெயர்ச்சி 100% திருமணக்கனவை நனவாக்கும். உங்களின் குணநலன்களுக்கு ஏற்ற, மனதிற்குப்பிடித்த நல்வாழ்க்கைத்துணை அமையும்.
  • தம்பதியர் ஒற்றுமை: திருமணமான தம்பதியருக்குள் இதுநாள் வரை இருந்து வந்த மனஸ்தாபங்கள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் நீங்கி, வாழ்க்கைத்துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்நற்பலன் காதலிப்பவர்களுக்கும் பொருந்தும்.
  • சகோதர ஒற்றுமை: குருவின் சுப பார்வையால் உடன்பிறந்தவர்களுடன் இருந்த முரண்பாடுகள் நீங்கும். சகோதரர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு வணிகத்தில் அபரிமிதமான லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.

3. அபரிமிதமான பணவரவும் சமூக அந்தஸ்தும்

லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால், உங்கள் பொருளாதார நிலை மடமடவென உயரும்:

  • முதலீடுகளில் லாபம்: நீண்ட காலத்திற்கு முன்பு நீங்கள் செய்து வைத்த முதலீடுகளிலிருந்து இப்போது எதிர்பாராத அளவிற்கு மாபெரும் நிதி ரீதியான லாபங்கள் (Financial Returns) வந்து சேரும்.
  • பணப்புழக்கம் அதிகரிப்பு: அன்றாடச் செலவுகளுக்கே சிரமப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்குப் பணப்புழக்கம் (Cash Flow) கணிசமாக அதிகரிக்கும். மேலும், மாற்று வருமானத்திற்கான (Secondary Income) புதிய வழிகள் தடையின்றித் தென்படும்.
  • சமூக கௌரவம்: சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் பன்மடங்கு உயரும். பெரிய மனிதர்கள் மற்றும் செல்வந்தர்களின் நட்பு வட்டாரம் தானாகவே தேடி வரும்.
  • தலைமைப் பொறுப்புகள்: பொதுச் சங்கங்களின் தலைமைப் பொறுப்புகள், செயலாளர் அல்லது பொருளாளர் போன்ற முக்கிய பதவிகள் தேடி வரும். குறிப்பாக ஆன்மீகம் மற்றும் கோவில் நிர்வாக அமைப்புகளில் (கோவில் தலைவர் பதவி போன்றவை) கௌரவமான பொறுப்புகள் உங்களை வந்தடையும்.

4. 12 வருடங்களுக்கு ஒருமுறை கிடைக்கும் ராசிப் பார்வை: மன ஆற்றலும் ஆரோக்கியமும்

குரு பகவான் தன் ஏழாம் பார்வையால் உங்கள் மகர ராசியை (முதல் வீடு) நேரடியாகப் பார்க்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய மிகச் சிறப்பான அமைப்பு இதுவாகும். இதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள்:

  • சுறுசுறுப்பு மற்றும் பொலிவு: இதுவரை தன் சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சோம்பேறித்தனமாக முடங்கிக் கிடந்தவர்கள், இந்த ஐந்து மாதங்களில் அதீத சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவர். முகத்திலும் தோற்றத்திலும் புதிய பொலிவு உண்டாகும்.
  • முடிவெடுக்கும் திறன்: உங்களின் முடிவெடுக்கும் திறன் (Decision Making Skills) பெருமளவு மேம்படும். நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகளால் பணியிடத்தில் பாராட்டுகளும் லாபங்களும் குவியும். உங்களை நீங்கள் ஊக்கப்படுத்திக்கொண்டு (Self-Confidence) சாதிப்பீர்கள்.
  • மன அழுத்தம் குறைதல்: வாழ்க்கை மிகவும் நெரிசலாகவும், மன அழுத்தம் நிறைந்ததாகவும் போய்க்கொண்டிருந்த நிலை மாறி, மன அமைதியும் வசதியான வாழ்க்கையும் (Comfortable Life) அமையும். நீண்ட நாள் உடல்நலப் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறக்கும்.

முடிவுரை

சுருக்கமாகக் கூறின், 2026 ஜூன் முதல் அக்டோபர் 31 வரையிலான இந்த ஐந்து மாத காலகட்டம் மகர ராசியினருக்குத் தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய அற்புதமான பொற்காலமாகும். இதன் பிறகு குரு பகவான் அதிசார கதியில் சிம்ம ராசிக்குச் செல்வார். இந்த பெயர்ச்சியால் மகர ராசியினர் முழுமையான நற்பலன்களையும், ராசிக்கு நேரடி குரு பார்வையையும் பெறுவதால், ஜோதிட ரீதியாக இப்பெயர்ச்சிக்கு 100-க்கு 87 மதிப்பெண்கள் வழங்கலாம்.

குரு பகவான் உங்களுக்கு முழுமையாகச் சாதகமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்தவொரு பெரிய பரிகாரங்களையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

87
ஒட்டுமொத்த மதிப்பெண் — 100-க்கு 87